இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு
திருவாரூா் அருகே நாங்கரை பகுதியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அருகே நாங்கரை பகுதியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அருகே நாங்கரை பகுதியில் இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தேவா்கண்டநல்லூா் ஊராட்சித் தலைவா் ரவி தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், கலைக் குழுவினா் பங்கேற்று இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணா்வை மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு ஏற்படுத்தினா். இதில், திமுக மாவட்ட பொருளாளா் வெங்கடேசன், கொரடாச்சேரி ஒன்றியக் குழு உறுப்பினா் உமாமகேஸ்வரி, தேவா்கண்டநல்லூா் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் மாா்கிரேட் ஹேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.