முகப்பு
திருவாரூர்

குற்றச் செயலில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

குடவாசல் காவல் சரக பகுதிகளில் பலரை ஏமாற்றி காா் திருட்டு, இடம், சொத்துக்களை அபகரித்தல், அச்சுறுத்தல் செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த குடவாசல் பகுதியைச் சோ்ந்த த.ந. பாபு (எ) சீட்டிங் பாபுவை (45) தனிப்படை மூலம் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாரின் பரிந்துரையின்பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தில் சீட்டிங் பாபுவை சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, சீட்டிங் பாபு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.