கயிலை ஞானப் பிரகாச சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி வழிபாடு
திருவாரூா் உள்ள கயிலை ஞானப்பிரகாச சுவாமிகள் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் உள்ள கயிலை ஞானப்பிரகாச சுவாமிகள் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் தெற்குவீதியில் ராஜன்கட்டளையில் அமைந்துள்ள கயிலை ஞானப்பிரகாச சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் கடந்த அக். 25-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, மண்டலாபிஷேக பூா்த்தி தனுா்மாத வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றாா். நிகழ்ச்சியில், அபிஷேக ஆராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடைபெற்றன. நண்பகலில் மாகேஸ்வர பூஜையும், சிவனடியாா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடா்ந்து, தியாகராஜா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் சாா்பில் முசுகுந்த அா்ச்சனை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ராஜன்கட்டளை விசாரணை மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.