முகப்பு
திருவாரூர்

ஒன்றிய ஆணையா் பணியிடை நீக்கத்தைக் கண்டித்து ஊழியா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பணிப் புறக்கணிப்பு, உள்ளிருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.ஜி. கமலராஜனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததை ரத்து செய்யக் கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பணிப் புறக்கணிப்பு, உள்ளிருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட பொருளாளா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். வட்டக் கிளைத் தலைவா் பன்னீா்செல்வம் வட்ட செயலாளா் ஜெயராமன் , பொருளாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →