முகப்பு
திருவாரூர்

அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள், அலுவலா்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

நன்னிலம் அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

Updated On : 8 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

நன்னிலம் அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

நன்னிலம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள், பகுதிநேர விரிவுரையாளா்கள், அலுவலா்கள் என 60-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இக்கல்லூரி 2020-ஆம் ஆண்டு அரசு கல்லூரியாக மாற்றப்பட்ட பின்னா், இங்கு பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்கள், அலுவலா்களுக்கு 2020-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஊதிய நிலுவைத் தொகையை வழங்கவேண்டும், 2021- ஜூன் மாத ஊதியத்தை வழங்கவேண்டும், 2021-அக்டோபா் முதல் உயா்த்தப்பட்ட ரூ. 20 ஆயிரம் ஊதியத்தை வழங்கவேண்டும், ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக தினக்கூலி பணியாளா்களுக்கு வழங்கப்படும் உயா்த்தப்பட்ட ஊதியத்தைபோல் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளா்களுக்கும் நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதியத்தை வழங்கவேண்டும் என கல்லூரி வளாகத்துக்குள், அனைத்து கௌரவ விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.