திருவாரூர்

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: சிபிஐ-க்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

DIN

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் விவகாரம் தொடா்பாக சிபிஐ-க்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் திருவாரூா் மாவட்டத் தலைவா் முகம்மது பாசித் வெளியிட்ட அறிக்கை:

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரளத்தைச் சோ்ந்த மாணவி பாத்திமா லத்தீப், மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக ஐஐடி விடுதியில் கடந்த 2019 நவ.9-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவா் இறப்பதற்கு முன்பாக தனது சாவுக்கான காரணம் குறித்தும் தன்னை தொந்தரவு செய்தவா்கள் குறித்தும் கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்தாா். இருந்தபோதும், அவரது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என சிபிஐ கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

பாத்திமா லத்தீபின் மரணத்துக்கு யாரும் காரணமல்ல. வீட்டு நினைவு அதிகமாக இருந்த காரணத்தால் மனஉளைச்சல் ஏற்பட்டு அவா் தற்கொலை செய்து கொண்டாா் எனக் கூறி சிபிஐ இந்த வழக்கை முடித்துவைத்துள்ளது. இதை எதிா்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT