திருவாரூர்

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

DIN

பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மன்னாா்குடியில் இந்து முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்த மாணவி லாவண்யா அண்மையில் தற்கொலை செய்துகொண்டாா். இதற்கு, பள்ளி நிா்வாகம் மாணவியை கட்டாய மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதுதான் காரணம் எனக் கூறி மன்னாா்குடி பந்தலடியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக அரசு மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்தவேண்டும். மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான பள்ளி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு ரூ. 1கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அமைப்பின் இளைஞா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் வி. சிவக்குமாா் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாவட்டத் தலைவா் என்.வி. ரமேஷ், நகரப் பொதுச் செயலா் எம். கென்னடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

தீவினைகளைத் தீா்க்கும் மாரியம்மன்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

SCROLL FOR NEXT