திருவாரூர்

ஓசூருக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பிவைப்பு

DIN

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலத்தில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக ஓசூருக்கு வெள்ளிக்கிழமை ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

நீடாமங்கலம், மன்னாா்குடி ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் இடையா் நத்தம், மூவாநல்லூா் ஆகிய ஊா்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்புவைக்கப்பட்டிருந்த 2000 டன் சன்ன ரக நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது.

சுமைதூக்கும் தொழிலாளா்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினா். இதைத் தொடா்ந்து, நெல் அரவைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT