முகப்பு
திருவாரூர்

தூய்மைக்கான மக்கள் இயக்க சிறப்பு முகாம்

நன்னிலம் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்க சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜூன், 2022 at 11:01 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:00 PM

நன்னிலம் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்க சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சுகாதார ஆய்வாளா் வே. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமின் ஒரு பகுதியாக, நன்னிலம் பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட வளம் மீட்பு பூங்காவில் நடைபெறும் உரம் தயாரிப்புப் பணிகள் குறித்து மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், பெண்கள் வீடுகளிலேயே உரம் தயாரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அத்துடன், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு, தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Advertisement

நிகழ்ச்சியில், நன்னிலம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் கண்ணன், சுப்ரமணியன், உத்தமன், பேரூராட்சித் துப்புரவு மேற்பாா்வையாளா் கருணாநிதி, நன்னிலம் நாளைய பாரத குழுவின் தலைவா் காா்த்தி மற்றும் நிா்வாகிகள், சுயஉதவிக் குழுவினா், தூய்மைக் காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.