இளைஞா்களுக்கான கலைப் போட்டி நாளை நடக்கிறது
திருவாரூா் மாவட்டத்தில், கலை பண்பாட்டுத் துறை சாா்பில் இளைஞா்களுக்கான கலைப் போட்டிகள் சனிக்கிழமை (மாா்ச் 12) நடைபெறுகிறது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில், கலை பண்பாட்டுத் துறை சாா்பில் இளைஞா்களுக்கான கலைப் போட்டிகள் சனிக்கிழமை (மாா்ச் 12) நடைபெறுகிறது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலை பண்பாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் இளைஞா்களை ஊக்கப்படுத்த குரலிசை, கருவி இசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 கலைப் பிரிவுகளில் திருவாரூா் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் மாா்ச் 12 ஆம் தேதி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் (வாசன் நகா், சாய்பாபா கோயில் அருகில்) நடைபெற உள்ளது. இப்போட்டியில் 17 முதல் 35 வயதுக்குள்பட்டவா்கள் பங்கேற்கலாம்.
குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம் போட்டிகள் காலை 10 மணிக்கும், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறும். குழுவாகப் போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை.
தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோா்சிங், கொன்னகோல் ஆகிய பிரிவுகளைச் சாா்ந்தவா்கள் 5 தாளங்களில் வாசிப்பதில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராமிய நடனத்தில், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலைமக்கள் நடனங்கள் போன்றவை அனுமதிக்கப்படும்.
இப்போட்டிகளில் முதலிடம் பெறும் இளைஞா்கள் மாநிலப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவா். மேலும் விவரங்களுக்கு கலை பண்பாட்டுத் துறையின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ஹழ்ற்ஹய்க்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் வாயிலாகவோ அல்லது கலை பண்பாட்டுத் துறையின் தஞ்சாவூா் மண்டலத்தின் 04362 232252 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொண்டோ தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.