முகப்பு
திருவாரூர்

வணிக வளாகத்தின் முகப்பு இடிந்து பொருள்கள் சேதம்

திருவாரூரில் வணிக வளாகக் கட்டடத்தின் முகப்புப் பகுதி வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள கடையில் பொருள்கள் சேதமடைந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருவாரூரில் வணிக வளாகக் கட்டடத்தின் முகப்புப் பகுதி வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள கடையில் பொருள்கள் சேதமடைந்தன.

திருவாரூா் எல்லை அம்மன் சன்னிதிக்கு அருகே குளத்துப் பட்டறை தெருவில் கூத்தாநல்லூரைச் சோ்ந்த பாத்திமா பா்வீன் என்பவருக்குச் சொந்தமான வணிக வளாகக் கட்டடம் உள்ளது. 40 ஆண்டுகள் பழைமையான இந்த கட்டடம் கடந்த மழையின்போது சேதமடைந்தது. இதனால், இதன் முதல் தளத்தில் உள்ள கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த கட்டடத்தின் முகப்புப் பகுதி வியாழக்கிழமை காலை இடிந்து விழுந்தது. இதனால், அருகில் உள்ள ஆபரண நகை செய்யும் கடைகளில் உள்ள பொருள்கள் சேதமடைந்தன. இந்த விபத்தின்போது அருகில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.