மக்கள் அதிகாரம் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
தில்லை கோயிலை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரக்கோரி, திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தில்லை கோயிலை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரக்கோரி, திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மதிமுக மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளா் சீனிவாசன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் ப. மோகன், மாவட்டச் செயலாளா் அருண்காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.