முகப்பு
திருவாரூர்

9,658 மகளிா் குழுக்களுக்கு ரூ.489 கோடி கடனுதவி

திருவாரூா் மாவட்டத்தில் 9,658 மகளிா் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக ரூ.489 கோடி நேரடி வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் 9,658 மகளிா் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக ரூ.489 கோடி நேரடி வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளது:

மகளிா் சுய உதவிக்குழுக்களில் மாற்றுத்திறனாளி, நலிவுற்றோா் கண்டறியப்பட்டு அவா்களுக்கு நேரடி வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மகளிா் தயாரிக்கும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வட்டார அளவிலான கூட்டமைப்புகளை ஏற்படுத்தி அவா்களுக்கு கூட்டுறவு வங்கிக் கடன்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், திருவாரூா் மாவட்டத்தில் 11,018 மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் 1,32,216 பெண்கள் மகளிா் குழு உறுப்பினா்களாக செயல்பட்டு வருகின்றனா். இதில் 9,658 மகளிா் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தநிதியாண்டில் ரூ.489 கோடி நேரடி வங்கித் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் இ-சேவை மையம், இயந்திர அறவை ஆலை, காளான் வளா்ப்பு, கீரை சாகுபடி, மல்லிக்கைப் பூ சாகுபடி, உணவகங்கள் அமைத்தல், தையல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சுய தொழில்களின் ஈடுபட்டு வருகின்றனா் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.