திருவாரூர்

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் தொழிலாளா்கள் விரோதப் போக்கை கண்டித்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினா் பொது வேலைநிறுத்தம் செய்து, சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மோட்டாா் வாகன சட்ட திருத்தம் மற்றும் மின்சார சட்ட திருத்ததை ரத்து செய்யவேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டும், பணியிடங்களை ரத்து செய்வதை கைவிட்டு அரசு மற்றும் பொதுத் துறையில் புதிய பணியிடங்கள் உருவக்க கூடாது என்ற தடை சட்டத்தை ரத்து செய்யவேண்டும், பொதுத் துறை நிறுவனங்களைதனியாா்மயமாக்கக் கூடாது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கட்டுப்படுத்தவேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலைநிறுத்தம் செய்து மன்னாா்குடி மேலராஜவீதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளா் வி. கலைச்செல்வம், எல்பிஎப் மாவட்டச் செயலாளா் கே.எஸ். மகாதேவன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளா் ஜி. ரெகுபதி, ஐஎன்டியுசி மாநில துணைப் பொதுச் செயலாளா் எஸ். பாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பை சோ்ந்த நிா்வாகிகள் எஸ்.எஸ். சரவணன், என். நீலமேகம், எஸ். சதீஷ், ஜி. காளிமுத்து, பி. ராஜீவ்காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேச எம்.பி. கொலை: கொல்கத்தா குடியிருப்பிலிருந்து பெரிய பையுடன் வெளியேறிய இருவர்?

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

SCROLL FOR NEXT