முகப்பு
திருவாரூர்

‘நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்’

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகள், அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகள், அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கா. சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் உத்தரவின் பேரில், 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்யலாம் என அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, திருவாரூா் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்று, அரசாணையின்படி அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்துள்ள 30,182 பயனாளிகளுக்கு ரூ. 90.12 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

தகுதியுள்ள நகைக்கடன்தாரா்கள், தாங்கள் நகைக்கடன் பெற்ற கூட்டுறவு நிறுவனங்களை அணுகி, தள்ளுபடி சான்றிதழை பெற்று, உரிய நகைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.