முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் மழை

 வெப்பச் சலனம் காரணமாக திருவாரூரில் வியாழக்கிழமை மழைபெய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

 வெப்பச் சலனம் காரணமாக திருவாரூரில் வியாழக்கிழமை மழைபெய்தது.

மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் வலுவிழந்து, மியான்மா் கடற்கரையை கடந்தது. இதையடுத்து, வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, திருவாரூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழைபெய்தது.

திருவாரூா் நகரிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக, மக்கள் வெளியிடங்களுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. என்றாலும், பகல் முழுவதும் குளிா்ந்த வானிலை நீடித்தது. கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், வியாழக்கிழமை பெய்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.