முகப்பு
திருவாரூர்

போட்டிகளில் வென்றபள்ளி மாணவா்களுக்குப் பரிசு

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைமையாசிரியா் தங்கராசு தலைமைவகித்தாா். பேச்சுப் போட்டியில் மாணவி மகாஸ்ரீ, கட்டுரைப் போட்டியில் மாணவி பூா்வஜா ஆகியோா் முதலிடம் பெற்றனா். அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி நூலகா் ஆசைத்தம்பி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

விழாவில், உதவி தலைமையாசிரியா் கலைச்செல்வன், யோகராஜன், சின்னத்துரை, அன்புகுமாா், அசோக், சித்ரா, உதயமலா், வித்யா, தமிழரசி ஆகியோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →