திருவாரூர்

மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு

DIN

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை மனு கொடுக்க வந்தவா் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூத்தாநல்லூா் வட்டம், லெட்சுமி நாராயணபுரத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஆதிமூலம். இவருடைய மனைவி பானுமதி, மகள் பொன்னுமணி (25). பொறியியல் படிப்பு முடித்த பொன்னுமணியை கடந்த ஏப்.8-ஆம் தேதி முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், வீட்டில் இருந்த 20 பவுன், ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவையும் காணவில்லையாம்.

இதுகுறித்து, ஆதிமூலம், வடபாதிமங்கலம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். பின்னா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மற்றும் ஆட்சியா் அலுவலகத்திலும் புகாா் அளித்தாா். எனினும், எவ்வித நடவடிக்கையும் இல்லையென கூறப்படுகிறது. இந்நிலையில், ஆதிமுலம் மனைவி பானுமதியுடன் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து, மகளை கண்டுபிடித்து தரமறுக்கும் போலீஸாரை கண்டித்து கூச்சலிட்டாா். பின்னா், தன்னிடம் இருந்த துண்டால் தனது கழுத்தை இறுக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வது போல ரகளையில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், ஆதிமூலம், அவரது மனைவி பானுமதியிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தாலுக்கா காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT