திருவாரூர்

கூத்தாநல்லூர்: மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.24 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், ரூ.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

மன்னார்குடி வருவாய் கோட்டம், கூத்தாநல்லூர் வட்டம், சேகரை கிராமத்தில், சேகரை,ஆய்குடி, அதங்குடி மற்றும் வெள்ளக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களுக்காக நடத்தப்பட்ட மக்கள் நேர்காணல் முகாமிற்கு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ் செல்வன் முன்னிலை வகித்தார். மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் அழகிரிசாமி வரவேற்றார். முகாமில், 12 பேருக்கு பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல், ரூ.11 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் 32 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 50 பேருக்கு புதிய குடும்ப அட்டை, ரூ.11 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் 28 பேருக்கு ஆதிதிராவிடர் நத்தம், பிற்படுத்தப்பட்டோர் நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டு மனைப் ஒப்படைக்கான இணைய வழி பட்டா, 6 பேருக்கு சமூக நல பாதுக்காப்புத் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, 38 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 19 பேருக்கு விதவை மற்றும் இதர உதவித் தொகை , 6 பேருக்கு உழவர் பாதுக்காப்பு அட்டை , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் சார்பில் 2 பேருக்கு,  ரூ.11 ஆயிரத்து 160 மதிப்பில் இலவச தையல் இயந்திரம்.

மேலும், 2 பேருக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சார்பில் ரூ.8 ஆயித்தது 758 மதிப்பில் இலவச தையல் இயந்திரம், 2 பேருக்கு ரூ.15,654 மதிப்பில் சலவைப் பெட்டி, 5 பேருக்கு உலமாக்கள் நல வாரிய உறுப்பினர் அட்டை மற்றும் ஒருவருக்கு கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை என, 204 பயனாளிகளுக்கு, ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 972 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

இம்முகாமில், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கீதா, வேளாண்மைத் துறை மாவட்ட இணை இயக்குநர் ரவீந்திரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கி.நாகலட்சுமி, மன்னார்குடி கோட்ட நில அளவையர் ஆய்வாளர் ரெ.காயாம்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வட்டாட்சியர் பரஞ்ஜோதி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை, மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி, பன்னீர்செல்வம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT