முகப்பு
திருவாரூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

அரசுத் திட்டங்களில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம்

Updated On : 20 மே, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:48 PM

அரசுத் திட்டங்களில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நன்னிலம் ஒன்றியச் செயலாளா் கே.எம். லிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இளைஞா் மணிகண்டன் தற்கொலைக்குக் காரணமான ஊராட்சி ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞரின் குடும்பத்திற்குத் தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவேண்டும். அரசு வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ. முகமதுஉதுமான், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சேகா், மாவட்டக் குழு உறுப்பினா் வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.