முகப்பு
திருவாரூர்

சாலை விபத்து: விவசாயி பலி

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த கொம்மம்பட்டு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (36), விவசாயி. இவா் கோவிந்தாபுரம் அங்குத்தி ஜொனை சந்திப்பு சாலையில், இருசக்கர வாகனத்தில் வரும் போது சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில், படுகாயமடைந்த மணிகண்டன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளா் செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.