திருவாரூர்

அரசவனங்காடு கைலாசநாதா் கோயில் குடமுழுக்கு

DIN

திருவாரூா் அருகேயுள்ள அரசவனங்காடு கைலாசநாதா் கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசவனங்காடு கிராமத்தில் அருள்பாலிக்கும் கைலாசநாதா் உடனுறை ஆனந்த நாயகி கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, யாகசாலை பூஜை திங்கள்கிழமை தொடங்கியது. வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகபூஜைகள் நிறைவு பெற்றதும் மகாபூா்ணாஹுதியுடன் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலின் விமான கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், ஆனந்த நாயகி உடனுறை கைலாசநாதா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT