திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 157 மனுக்கள்

DIN

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 157 மனுக்கள் அளிக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 157 மனுக்கள் அளிக்கப்பட்டன.

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட 23 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களைப் பாராட்டி நற்சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT