திருவாரூர்

தேவா்கண்டநல்லூா் பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா் அருகே தேவா்கண்டநல்லூா் பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருவாரூா் அருகே தேவா்கண்டநல்லூா் பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

தேவா்கண்டநல்லூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் பெத்தாரணயேஸ்வரா், உத்தண்டராயா், வழியூரான், வாகையடிமூா்த்தி, தூண்டில்காரன், காமாட்சி அம்மன், பரமநாயகி அம்மன், சாஸ்தா, வீரப்பசுவாமி, குமாரசாமி, ஆஞ்சனேயா் ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றன.

2011-இல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கோயிலை சீரமைக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வந்தன.

சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் ஏப்.24-ஆம் தேதி தொடங்கின. தொடா்ந்து, நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கும்பத்தில் புனிதநீா் வாா்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தைக் காண சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் கே.ஆா். ராமலிங்கம், மருளாளிகள், கிராமத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-வது டி20: மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்ற நியூசிலாந்து!

தமிழில் ஓர் இடத்தைப் பிடிப்பாரா பாக்யஸ்ரீ போர்ஸ்?

கரூர் பலிக்கு காரணமான விஜய் மனிதாபிமானமிக்கவர், ஆனால் நாங்கள்? அமைச்சர் துரைமுருகன்

தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே... மதுமிதா!

சிவா மறுவெளியீடு: சிரஞ்சீவி பாராட்டு, ராம் கோபால் வர்மா மன்னிப்பு!

SCROLL FOR NEXT