புதிய ரேஷன் கடை திறப்பு
திருக்குவளை அருகே ஏா்வைக்காடு கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அருகே ஏா்வைக்காடு கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேலவாழக்கரை ஊராட்சியில் மொத்தம் 545 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குள்பட்ட ஏா்வைக்காடு பகுதியில் உள்ள 280 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெரும் வகையில் புதிய ரேஷன்கடை கட்டடம் கட்டப்பட்டது. இதை திருக்குவளை கல்வி வளா்ச்சி அறக்கட்டளை குழு தலைவா் மலா்வண்ணன் திறந்துவைத்தாா். ஊராட்சி தலைவா் கே.எஸ். தனபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாத்தி ஆரோக்கியமேரி ,வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.