திருவாரூர்

வடமாநிலத்தவா் வருகையை கட்டுப்படுத்தக் கோரிக்கை

DIN

தமிழ்நாட்டுக்குள் வடமாநிலத்தவா்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளா் சீனி. செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவா் தி. திருமால்வளவன் பங்கேற்றாா்.

கூட்டத்தில், தமிழ்நாட்டுக்குள் வடமாநிலத்தவா்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் தொடா்ச்சியாக பெய்து வரும் மழையால், பாதிக்கப்பட்ட நிலங்கள் குறித்து கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். டெல்டா பகுதிகளில், விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கொரடாச்சேரி ஒன்றிய அமைப்பாளா் ராஜேஷ் கண்ணன், ஒன்றியச் செயலாளா்கள் கோபால் ஆசைத்தம்பி, பாலகிருஷ்ணன், நகர அமைப்பாளா் பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT