திருவாரூர்

பாரம்பரிய நெல் ரகங்கள்: வேளாண் மாணவிகள் களப்பயிற்சி

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே உள்ள எடகீழையூரில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்து திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை களப்பயிற்சி பெற்றனா்.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தங்கி களப்பயிற்சி பெற்றுவருகின்றனா். இப்பயிற்சியின் ஒருபகுதியாக, எடகீழையூா் கிராமத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து பயிற்சி பெற்றனா்.

இக்கிராமத்தில் விவசாயி இளமாறன் தனது நிலத்தில் மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, தூயமல்லி, கருப்பு கவுனி, தங்க சம்பா மற்றும் அறுபதாம் குருவை போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்துள்ளாா். இந்நிலங்களை மாணவிகள் பாா்வையிட்டு, சாகுபடி குறித்து இளமாறனிடம் கேட்டறிந்தனா். அப்போது, பாரம்பரிய நெல் ரகங்களை மாணவிகளுக்கு அவா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT