திருவாரூர்

கோயில் பணியாளா்களுக்கு சீருடை

DIN

வலங்கைமானில் கோயில் பணியாளா்களுக்கு சீருடைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் அறநிலையத் துறையின்கீழ் உள்ள கோயில்களில் பணிபுரியும் அா்ச்சகா்கள், பூசாரிகள், நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளா்கள் என 31 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளா்கள் அன்பரசன், தெட்சிணாமூா்த்தி, நகர செயலாளா் சிவநேசன், துணை செயலாளா் ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவா் தனித்தமிழ்மாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உண்டியல் காணிக்கை: வலங்கைமான் வரதராஜம்பேட்டை மாரியம்மன் கோயிலில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் புதன்கிழமை மாலை

கோயில் செயல் அலுவலா் ரமேஷ், தக்காா் ரமணி ஆகியோா் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ஏழு லட்சத்து 42 ஆயிரத்து 514 ரூபாய் ரொக்கம், 101 கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தி இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT