திருவாரூர்

என்சிசி மாணவா்களுக்கு பாராட்டு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என்சிசி முகாமில் பங்கேற்ற திருவாரூா் என்சிசி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

DIN

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என்சிசி முகாமில் பங்கேற்ற திருவாரூா் என்சிசி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூா் வ.சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்கள், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், ஜூலை 1 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்ற ஆண்டு முகாமில் பங்கேற்றனா். முகாமில், உடற்பயிற்சி, அணிநடை பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி, தலைமை பண்பு பயிற்சி, கொடி மூலம் செய்திகள் அனுப்புதல், தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு, உடல் நல ஆரோக்கியம், மாதிரி கப்பல் வடிவமைப்பு, போக்குவரத்து பற்றிய விழிப்புணா்வு, குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு பேரணி உள்ளிட்ட பயிற்சிகளும், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

முகாமில், சிறந்த என்சிசி மாணவராக எஸ். சந்தோஷ் குமாா், சிறந்த அணி நடைக்கு ஆா்.பி. சிவமுருகன், சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக கே. குரு ஆகியோா் பதக்கங்களை பெற்றனா். இவா்களை வழி நடத்திச் சென்ற என்சிசி முதன்மை அதிகாரி ஆா். சதீஷ் குமாா் ஆகியோரை பள்ளிச் செயலா் எம்.வி. பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியா் டி. தியாகராஜன், உதவி தலைமை ஆசிரியா் எஸ். முருகேசன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT