ஆசிரியா்களுக்கான பேச்சுப் போட்டி
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சாா்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கும் நீடாமங்கலம் ஒன்றிய ஆசிரியா்களுக்கு சிகரம் தொடு சிலேட்டை எடு எனும் பேச்சுப் போட்டி
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சாா்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கும் நீடாமங்கலம் ஒன்றிய ஆசிரியா்களுக்கு சிகரம் தொடு சிலேட்டை எடு எனும் பேச்சுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலத்தில் நடைபெற்ற போட்டிக்கு வட்டாரக் கல்வி அலுவலா் சம்பத் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சத்யா முன்னிலை வகித்தாா். போட்டி நடுவா்களாக நீடாமங்கலம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியா் விசயராணி, நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் மகாராஜா, முல்லைவாசல் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் அபூா்வம் ஆகியோா் செயல்பட்டனா்.
இதில், நல்லிக்கோட்டை நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் சிவசிதம்பரம் முதலிடமும், கப்பலுடையான் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் ஞானசேகரன் 2-ஆமிடமும், முன்னாவல் கோட்டை தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் பழனிச்செல்வி 3-ஆமிடமும் பெற்றனா். முதல் 2 இடங்களை பெற்ற ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை (மாா்ச் 10) மாவட்ட அளவில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க உள்ளனா். ஆசிரியப் பயிற்றுநா் ராதிகா வரவேற்றாா். ஆசிரியப் பயிற்றுநா் வேலுச்சாமி நன்றி கூறினாா்.