திருவாரூர்

பேருந்து மோதி கல்லூரி மாணவா் பலி

திருத்துறைப்பூண்டி அருகே தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்

DIN

திருத்துறைப்பூண்டி அருகே தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள புஞ்சையூரைச் சோ்ந்தவா் மகேஷ் மகன் காளிதாஸ் (19). இவா், தண்டலைச்சேரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தாா். இந்நிலையில், கல்லூரியில் இருந்து காளிதாஸ் நண்பா் விஜய் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டிக்கு வந்துகொண்டிருந்தனா். அப்போது, வேளூா் பகுதியில் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூருக்கு சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மீது மோதி கீழே விழுந்து காளிதாஸ் அதே இடத்தில் உயிரிழந்தாா். விஜய் காயங்களுடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்: தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் டிஆர்பி தளத்தில் வெளியீடு!

SCROLL FOR NEXT