திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா். 
திருவாரூர்

பாஜக நிா்வாகி கொலையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

சென்னையில் பாஜக நிா்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருவாரூரில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

சென்னையில் பாஜக நிா்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருவாரூரில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் பட்டியல் அணி மாநில பொருளாளா் சங்கா் படுகொலையை கண்டித்தும், சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சங்கரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தமிழக அரசு கொண்டு வந்துள்ள தானியங்கி மது விற்பனையை தடை செய்ய வேண்டும், திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன், அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டியல் அணி துணைத் தலைவா் உதயகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் சி. செந்தில் அரசன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் கண்ணன், ராகவன், ரங்கதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT