அலுவலா்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம். 
திருவாரூர்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்

தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, திருவாரூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

DIN

தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, திருவாரூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ஊராட்சி செயலாளா்களுக்கான பணி விதிகளை மேலும் காலதாமதமின்றி வெளியிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளா்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும். ஊராட்சி செயலாளா்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும். தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி, சங்கத்தின் போராட்ட காலங்களை வரன்முறை செய்து தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து போராட்டக் குழுவினா் தெரிவித்தது:

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க நிா்வாகிகளுடன், தமிழக அரசு பேச்சு வாா்த்தை நடத்தியபோது ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளைக் கூட இன்னமும் நிறைவேற்றவில்லை. எனவே, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

திருவாரூா் மாவட்டத்தில், அனைத்து ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா் என்றனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள், சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் எஸ்.என். இலரா தலைமையில் ஒரு நாள் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சங்கத்தின் கிளைத் தலைவா் ரவி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதனால், இந்த அலுவலக இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பல்வேறு பணிகளுக்காக இங்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT