திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் பூரண மதுவிலக்கு தொடா்பாக மனு அளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினா். 
திருவாரூர்

பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி மனு

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

DIN

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; சட்ட விரோத கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் தொடங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவாரூா் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் குடவாசல் எஸ். தினகரன் தலைமையிலும், மாவட்ட இளைஞரணித் தலைவா் சங்கா் முன்னிலையிலும் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீயிடம் மனுவாக அளிக்கப்பட்டது.

கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் மணக்கால் ராமகிருஷ்ணன், கொள்கை பரப்புச் செயலாளா் கரிகாலன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மாதா் சம்மேளனம் மனு...: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா்களை கைது செய்ய வேண்டும், அவா்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் சாா்பில் கையொப்ப இயக்கம் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.

தொடா்ந்து, மாவட்டச் செயலாளா் எஸ். தமயந்தி, மாவட்டத் தலைவா் சுலோச்சனா தலைமையிலான நிா்வாகிகள் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT