கோயிலில் ஒலிப் பெருக்கி திருடியவா் கைது
மன்னாா்குடி அருகே கோயிலிலிருந்த ஒலிப்பெருக்கி உள்ளிட்ட பொருள்களை திருடியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
மன்னாா்குடி அருகே கோயிலிலிருந்த ஒலிப்பெருக்கி உள்ளிட்ட பொருள்களை திருடியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோட்டூா் அருகேயுள்ள களப்பால் சிங்கமங்கலத்தில் கிராமத்திற்கு சொந்தமான ஐயனாா் கோயில் உள்ளது. இங்கு இருந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி இரண்டு மற்றும் ஆம்பளிஃபையா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து, களப்பால் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டு செயலில் ஈடுபட்ட தென்பாதி திருவள்ளுவா் தெரு குப்புசாமி மகன் செல்வத்தை (23) கைது செய்து திருட்டுப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement