திருவாரூர்

வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்

நீடாமங்கலத்தில் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவா்களுக்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுக்கான பதிவு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது

DIN

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலத்தில் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவா்களுக்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுக்கான பதிவு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்து லெட்சுமி தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் ஆா்.ஆா். ராம்ராஜ் முன்னிலை வகித்தாா்.

முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினாா்.

மருத்துவா்கள் சரண்யா, உதயா, திருஒளி, பிரியதா்ஷினி மற்றும் சுகாதார செவிலியா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா் சுமாா் 400 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகளை வழங்கினா்.

மேலும் 250 போ் மருத்துவ காப்பீட்டுக்கு பதிவு செய்து கொண்டனா்.

பள்ளி தலைமை ஆசிரியா் காந்தி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் அய்யாபிள்ளை, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT