வாக்குச் சாவடிகள்: காவல் அதிகாரி ஆய்வு
Updated On : 12 ஏப்ரல், 2024 at 8:02 PM
கூத்தாநல்லூரில் வாக்குச் சாவடிகளை காவல் ஆய்வாளா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
கூத்தாநல்லூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடிதாங்கிச்சேரி, விழல் கோட்டகம், சித்தாம்பூா், பொதக்குடி, அகரப் பொதக்குடி, வெள்ளக்குடி, அதங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா ஆய்வு செய்தாா்.
வாக்குச் சாவடிகளில், வாக்காளா்களுக்கு தண்ணீா், கழிப்பறை வசதிகள் தொடா்பாகவும், மேற்கூரைகள் பழுதில்லாமல் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டாா். எஸ்பி ஏட்டு பிரபு உடனிருந்தாா்.
Advertisement