திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள். 
திருவாரூர்

4 சதவீத அகவிலைப்படி கோரி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

4 சதவீத அகவிலைப்படி வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Din

திருவாரூா்: 4 சதவீத அகவிலைப்படி வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படியை, சுதந்திர தின நாளில் அறிவிக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், மருத்துவப்படி மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், இறுதிச்சடங்கு தொகையாக ரூ. 25,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கே. ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் ஜே. சிவபெருமாள், கே. சந்திரா, ஜி. சரஸ்வதி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT