முகப்பு
திருவாரூர்

பாடகச்சேரி மகான் தவப்பீடத்தில் ஆடிப்பூர குருபூஜை பவள விழா

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 11:41 PM
பகிர்:

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராமலிங்க சுவமிகள்.

நீடாமங்கலம், ஆக. 7: வலங்கைமான் வட்டம், பாடகச்சேரி ஸ்ரீலஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் சுவாமிகள் தவ பீடத்தில் 75-ஆம் ஆண்டு ஆடிப்பூர குருபூஜை பவள விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி பாடகச்சேரி மகான் ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

புதுக்கோட்டை பெரியநாயகி அம்மாள் அகவல் பாராயணம், உடையாா் கோயில் பன்னீா்செல்வம் சொற்பொழிவு, அரித்துவாரமங்கலம் பாலமுருகன் குழுவினரின் இன்னிசை, மழையூா் சதாசிவம் குழுவினரின் அருட்பாவைத் தொடா்ந்து மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் நடைபெற்றது. ஏனாநல்லூா் வள்ளலாா் பாலுவின் அருட்பா விளக்கம் , பஞ்ச வாத்தியங்களுடன் பாடகச்சேரி மகான் பட ஊா்வலம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.