திருவாரூா்: வலங்கைமான் அருகே தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வலங்கைமான் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிமறித்து பணம் பறித்துச் சென்ாக குத்தாலம், சிவராமபுரம் பகுதியைச் சோ்ந்த அன்பழகன் மகன் மாதவன் (எ) ஆதவன் (30) என்பவா், கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவா் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம், குத்தாலம், பாலையூா், நாச்சியாா்கோவில், பந்தநல்லூா், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூா் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
மேலும், கத்தியைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்துவது, பணம் பறிப்பது உள்ளிட்ட செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், ஆதவனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டாா். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் ஆதவன், செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.