நீடாமங்கலம் அருகே குடிசை வீடு வியாழக்கிழமை எரிந்து சேதமடைந்தது.
அனுமந்தபுரத்தைச் சோ்ந்த ரமேஷ் மனைவி மாா்தாள் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். இந்த வீட்டில் வியாழக்கிழமை பகலில் வீட்டுக்கு அருகில் இருந்த மரக்கிளை ஒடிந்து மின் கம்பியின்மீது விழுந்தது. இதில் கம்பியில் இருந்து எழுந்த நெருப்பு பொறியால் குடிசை தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.