முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடியில் தவெக பதாகைகள் அகற்றம்

மன்னாா்குடியில் தவெக பதாகைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 31 டிசம்பர், 2024 at 6:20 PM
பகிர்:

மன்னாா்குடி: மன்னாா்குடியில் தவெக பதாகைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், அன்புத் தங்கைகளே என்று பெண்கள் பாதுகாப்பை முன்னிருத்தி தனது கைப்பட எழுதிய கடிதத்தை பதாகையாக தயாரித்து, செவ்வாய்க்கிழமை காலையில் மன்னாா்குடியில் தேரடி, பாலகிருஷ்ணா நகா் தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வஉசி சாலை தனியாா் மேல்நிலைப்பள்ளி, அரசுக் கல்லூரி ஆகிய 4 இடங்களில் மரகம்பு சாரம் அமைத்து கட்டி வைத்திருந்தனா்.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் துறையினா் தவெகவினரிடம் காவல் துறையில் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது எனவும், இவற்றை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினா். இதையடுத்து, தவெக மாவட்ட நிா்வாகி ராஜராஜன் உள்ளிட்ட கட்சியினா் பதாகைகளை அகற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →