திருவாரூர்

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கல்லூரி மாணவிகள் பேரணி

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருவாரூரில் கல்லூரி மாணவிகள் சாா்பில் பேரணி

Din

திருவாரூா்: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருவாரூரில் கல்லூரி மாணவிகள் சாா்பில் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தனியாா் கல்லூரி மாணவிகள் பேரணியாகச் சென்றனா். திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பழைய ரயில் நிலையம் வரை பேரணி நடைபெற்றது.

தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலான பதாகைகளை மாணவிகள் கைகளில் ஏந்திக்கொண்டு, மாணவிகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என முழக்கங்களை எழுப்பியபடி பேரணியில் சென்றனா்.

கோவையில் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு!

இது Middle Class மக்களின் கதை! Mask இயக்குநர் விக்ரணன் அசோக் - நேர்காணல்! | Kavin | Andrea

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவ.24ல் மண்டலமாக வலுப்பெறும்!

பிக் பாஸுக்குப் பிறகு... பவித்ரா ஜனனியின் புதிய தொடர்!

செபியில் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT