முகப்பு
திருவாரூர்

பாலையூா் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:34 am IST
பகிர்:

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் பாலையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா். குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022-2023திட்டத்தின்கீழ், பாலையூா் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ. 33.39 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடத்தை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து, பாலையூா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் வி.எஸ்.ஆா். தேவதாஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எம். கலைவாணி,ஊராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன், ஒன்றிய ஆணையா் இ. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.