முகப்பு
திருவாரூர்

வடுவூா் கோயிலில் ரதசப்தமி விழா

Updated On : 17 பிப்ரவரி 2024, 6:03 am IST
பகிர்:

வடுவூா் கோதண்ட ராமா் கோயிலில் ரதசப்தமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வில் ஏந்திய திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் மூலவா் கோதண்டராமருக்கு சந்நிதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மா் சுவாமியை சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருள செய்தனா். ரதசப்தமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் அருள்பாலித்த லட்சுமி நரசிம்மரை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா், லட்சுமி நரசிம்ம சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும் உற்சவம் நடைபெற்றது.