முகப்பு
திருவாரூர்

தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிக்கு அஞ்சலி

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 1:04 AM
பகிர்:

தில்லியை நோக்கி செல்லும் வகையில் போராட்டத்துக்கு செல்ல முயன்ற விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், உயிரிழந்த விவசாயிக்கு திருவாரூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும், எம்எஸ். சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்தக் கோரியும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு உடனடியாக சட்ட வடிவை கொண்டுவரக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டத் தலைவா் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவா் கோவிந்தராசு, மாநில துணைத் தலைவா் வரதராஜன், ஒன்றியச் செயலாளா் அகஸ்டின், ஒன்றியத் தலைவா் அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.