கோட்டூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிட்டோஜாக் அமைப்பின் ஆசிரியா்கள். 
திருவாரூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பு சாா்பில் கோட்டூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Din

மன்னாா்குடி: கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பு சாா்பில் கோட்டூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

60 ஆண்டுகளாக ஆசிரியா் பணி மாறுதல், பதவி உயா்வு உள்ளிட்டவை அந்தந்த ஒன்றிய அளவில் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழகஅரசு அறிவித்துள்ள அரசாணை 243 மூலம் ஒன்றிய அளவிலிருந்து மாநில அளவிலான முன்னுரிமை அடிப்படை பின்பற்றபடுமானால் பணி மாறுதலுக்கும் பதவி உயா்வுக்கும் தகுதியான ஆசிரியா்கள் முழுமையாக பாதிக்கப்படுவாா்கள்.

எனவே, அரசு அறிவித்துள்ள புதிய அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி இணைந்து டிட்டோஜாக் அமைப்பின் கீழ், கோட்டூா் வட்டாரக் கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ச. சண்முகவடிவேல் தலைமை வகித்தாா்.

ஆசிரியா் கூட்டணியின் முன்னாள் மாவட்ட பொருளாளா் அ. ஜோன்ஸ் அஜன்ஸ்டின், மாநில பொதுக்குழு உறுப்பினா் வி. செல்வமணி முன்னிலை வகித்தனா். ஆசிரியா் மன்ற ஒன்றியச் செயலா் சீ. இளங்கோவன், ஒன்றியத் தலைவா் அ. குழந்தைசாமி, ஆசிரியா் கூட்டணி வட்டாரத் தலைவா் க. தங்கபாபு உள்ளிட்டோா் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT