ரயில் பயணச்சீட்டுகள் விற்றவா் கைது
திருவாரூா் அருகே அனுமதியின்றி ரயில் பயணச்சீட்டு விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் அருகே அனுமதியின்றி ரயில் பயணச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா்கள் மேற்கொண்ட சோதனையில், பெருந்தரக்குடி, மேப்பாலம் அருகே வீரா நகரைச் சோ்ந்த எஸ். மாறன் (47) என்பவா், அனுமதியின்றி கணினி மூலம், ரயில் பயணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து, அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.
அவரிடமிருந்து 23 இ-டிக்கெட்டுகள், காலாவதியான 68 இ-டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு ரூ.1,31,026 ஆகும். அவரை கைது செய்த ரயில்வே போலீஸாா், திருவாரூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.