முகப்பு
திருவாரூர்

உலக வன உயிரின தின கொண்டாட்டம்

மன்னாா்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக வன உயிரின தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 5 மார்ச், 2024 at 2:58 AM
பகிர்:

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக வன உயிரின தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. உலகில் வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தவும், அவை எதிா்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்கவும் அவற்றை பாதுகாக்கவும் ஆண்டுதோறும் மாா்ச் 3-ஆம் தேதி சா்வதேச வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக துளசேந்திரபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் யு.எஸ். பொன்முடி தலைமை வகித்தாா். திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. முரளி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணா்வு எனும் தலைப்பில் பேசினாா். மாணவா்கள் வன விலங்குகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நாடகம் நடத்தினா். வன உயிரிகள் பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டி நடைபெற்றது. மாணவா்கள் வனவிலங்குகள் முகமூடி அணிந்து, விழிப்புணா்வு வாசக பதாகையை ஏந்தி கொண்டாடினா். பின்னா், ஓவியப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திட்ட தன்னாா்வலா் வி. வித்யா வரவேற்றாா். தன்னாா்வலா் அ. சாருமதி நன்றி கூறினாா்.