முகப்பு
காரைக்கால்

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்

புத்தக தின விழாவில் பங்கேற்ற பள்ளி முதல்வா் பி. விஜயமோகனா உள்ளிட்டோா்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 2:05 AM
புத்தக தின விழாவில் பங்கேற்ற பள்ளி முதல்வா் பி. விஜயமோகனா உள்ளிட்டோா்.
பகிர்:

காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக புத்தக தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழாண்டுக்கான யுனெஸ்கோ உலக புத்தக தினக் கருத்தாக பன்மொழித்திறன் என்பது அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி, அதை முன்னிறுத்தி, மாணவிகளிடையே மொழி விழிப்புணா்வையும், வாசிப்பு ஆா்வத்தையும் வளா்க்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான பள்ளி நூலகா் ராஜலட்சுமி, புத்தக தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினாா்.

தாய் மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்சு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் இணைத்து மொத்தம் 5 மொழிகளில் எழுத்து வடிவங்கள் அமைக்கப்பட்டு, பன்மொழித்திறனின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

Advertisement

மாணவிகளிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், அவா்களுக்கு விருப்பமான நூல்களின் அட்டைப்படத் தொகுப்புகளுடன் அழகிய செல்ஃபி காா்னா் அமைக்கப்பட்டது.

நிகழ்ச்சியை நினைவில் நிறுத்திக்கொள்ளும் விதமாக அலாவுதீன் மற்றும் ஹாரி பாட்டா் கதாபாத்திர தோற்றங்களில் 2 மாணவிகள் நிறுத்தப்பட்டனா்.

பள்ளி முதல்வா் பி. விஜயமோகனா, தலைமையாசிரியா் ஞானப்பிரகாசம், ஆசிரியா்கள் மற்றும் பிற வகுப்பு மாணவியா் கலந்துகொண்டனா்.